[எண்ணாகமம் 22-24 இலிருந்து தியானம்]
👎 நீதிமானைத் தோற்கடிப்பதற்கும் விரட்டுவதற்கும் துன்மார்க்கன் தீய திட்டங்களை வகுக்கிறான். (22:3-6)
👍 தேவன் நீதிமானை உயர்த்துவார். (23:24)
👎 துன்மார்க்கன் ஜனங்களின் எண்ணிக்கையையும் பலத்தையும் நம்பியிருக்கிறான். (22:4,5,7,15)
👍 நீதிமான் தன் தேவனும் ராஜாவுமாகிய தேவனை சார்ந்திருக்கிறான். (23:21)
👎 துன்மார்க்கன் நீதிமானுக்கு எதிராக குறிசொல்லுதலைத் தேடுகிறான். (22:7)
👍 நீதிமானுக்கு எதிராக ஒரு மந்திரமும் இல்லை குறிசொல்லுதலும் இல்லை. (23:23)
👎 நீதிமானை சபிக்கவும் இகழ்வதற்கும் தொந்தரவு செய்வதற்குமான தன் காரணத்தை ஆதரிப்பவர்களுக்கு துன்மார்க்கன் பெரும் மரியாதையை வாக்களிக்கிறான். (22:17)
👍 நீதிமான் தேவனின் வாக்குறுதியில் இளைப்பறுகிறான். (23:19)
👎 நீதிமானை சபிக்க துன்மார்க்கன் வாய்ப்புகளைத் தேடுகிறான். (22:11; 23:11,27)
👍 நீதிமானை ஆசீர்வதிக்கும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீதிமானை சபிப்பவர்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள். (24:9)
👎 துன்மார்க்கனின் மத செயல்பாடு நீதிமானை அழிக்க முயல்கிறது. (23:1-3)
👍 நீதிமான் தேவனை பிரியப்படுத்துவதோடு, மற்றவர்களை தொந்தரவுசெய்யாதிருக்கிறான். (23:9)
👎 துன்மார்க்கனை நம்புகிறவர்கள் தங்களுடைய வார்த்தையை நிறைவேற்றாதவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். (24:11)
👍 நீதிமான் பொய் சொல்லாத மற்றும் தம்முடைய வார்த்தையைத் நிறைவேற்றுகின்ற தேவன்மீது நம்பிக்கை வைக்கிறான். (23:19)
👎 நீதிமானை அவமதிக்கவும் அவதூறு செய்யவும் இடங்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க துன்மார்க்கன் தந்திரமாக முயற்சி செய்கிறான். (23:13,27)
👍 நீதிமான் தொடர்ந்து செழித்து வளர்ந்து, தேவனுடைய உதவியால் பலன்கொடுக்கிறான். (24:5-7)