Showing posts with label Leviticus. Show all posts
Showing posts with label Leviticus. Show all posts

Monday, April 20, 2020

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் அடையாளங்கள்!



[லேவியராகமம் 27ல் இருந்து தியானம்]

👉 இரட்சிப்பு & பரிசுத்தமாக்குதல் - நாம் மீட்கப்பட்டு, அர்ப்பணிப்புள்ளவர்களாயிருக்க பரிசுத்தமாக்கப்படுதல். (10,11)

👉 பரிசுத்தம் - கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட எல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருத்தல். (28)

👉 தேவனுக்குரியது - வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் தேவனுக்குரியவர்களாய் வாழுதல். (2-7)

👉 வித்தியாசங்கள் - வயதுக்கும் கிரு‌‌பைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும் அர்ப்பணிப்பை ஏற்றுக்கொள்ளுதல். (2-7)

👉 கீழ்ப்படிதல் - பிரதிஷ்டை மதிப்பீடு செய்யும்படிக்கு, தெய்வீக தலைமைக்கு கீழ்ப்படிதல். (8,14,23)

👉 பணிவு - திறமையை காட்டிலும் எப்பொழுதும் எதையும் செய்யும் ஆயத்ததோடு சேவை செய்தல். (8)

👉 வெளிப்படைத்தன்மை - எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையாக வாழுதல். (30-33)

👉 உக்கிராணத்துவம் - நம்மிடம் இருப்பது அனைத்தும் தேவனுக்கு சொந்தமானது என்று அறிந்து பயன்படுத்துதல் மற்றும் கணக்கொப்புவித்தல். (9,14,16,17)

Saturday, April 18, 2020

தெய்வபயமுள்ள வாழ்வின் அடையாளங்கள்!



லேவியராகமம் 25ல் இருந்து தியானம்]

👉 ஒரு நல்ல உக்கிராணக்காரனாக எல்லாவற்றிலும் தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தல். (23)

👉 தேவனுடைய தலைமைத்துவத்தின் கீழ் விடுதலையான, பரிசுத்தமான மற்றும் கனிநிறைந்த வாழ்வில் இருத்தல்.
(55,10,21,22)

👉ஒருவரையொருவர் வஞ்சியாதிருத்தல். (14,17)

👉 ஜனங்களுடன் கடுமையாக நடந்து கொள்ளாதிருத்தல். (39-43,46)

👉 சிரமத்தில் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவி கரம் நீட்டுதல். (35-38)

👉 தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதில் உண்மையாய் இருத்தல். (18)

Friday, April 17, 2020

பிரகாசிக்கும் வாழ்வு!



[லேவியராகமம் 24ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய வார்த்தையையும் அவருடைய வழிகளையும் கடைப்பிடிக்க மற்றவர்களை நடத்துதல். [Lead] (1,23)

👉 சொந்த ஜனங்கள் மற்றும் அந்நியர் அனைவரையும் பாரபட்சமின்றி நடத்துதல். [Impartial] (22)

👉 தேவனுக்கு பயந்த வாழ்வு மற்றும் தேவனால் நடத்தப்பட்டு தீர்மானித்தல். [God fearing] (12,13)

👉 எப்போதும் பரிசுத்தமான ஜீவியம் [Holy living]. (4)

👉 ஜெபத்திலும் வேத தியானத்திலும் தவறாமல் தேவனோடு நேரம் செலவிடுதல். [Time with God] (2,3)

Thursday, April 16, 2020

அர்த்தமுள்ள பண்டிகை! [Meaningful Festival]



[லேவியராகமம் 23 இலிருந்து தியானம்]

👉 தேவனுக்கு முதன்மையானதும் சிறந்ததுமான [First & best] முன்னுரிமை. (10,14)

👉 முழு நாள் [Entire day] அல்லது காலம் தேவனுடைய சமூகத்தில் கழித்தல். (28-30)

👉 சுயமறுப்பும் [Self-denial] தேவனிடம் தத்தம் செய்யப்பட்ட வாழ்வும். (27,29,32)

👉 தேவனுக்கு நன்றி செலுத்துதல் [Thank] மற்றும் அவரில் களிக்கூருதல். (40)

👉 பரிசுத்தத்தில் சமரசம் செய்யும் எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாதிருத்தல். [Involve not] (37)

👉 தேவனுடைய பலியையும் விடுதலையையும் நினைவில் கொள்ளாத பண்டிகை அல்லது கொண்டாட்டம் வீண். [Vain] (5,43)

👉 தேவனுக்கு உகந்த [Acceptable] வாழ்க்கை மற்றும் நடக்கை (11)

👉 ஏழைகளுக்காக உணவு மற்றும் பொருட்களை விட்டுவிடுதல். [Leave] (22)

Wednesday, April 15, 2020

தேவனுக்குகந்த சேவை!



[லேவியராகமம் 21 & 22 இலிருந்து தியானம்]

👉 கர்த்தரும் அவருடைய ஊழியமும் பரிசுத்தமாயிருக்கிறதினால், தன்னைத் தீட்டுப்படுத்தாதிருத்தல். (21:1,6,11)

👉பிள்ளைகளையும் தலைமுறையையும் கர்த்தருக்கு ஏற்ற பரிசுத்தத்தில் வளர்த்தல். (21:9,17,21)

👉 கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படாதபடிக்கு நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை கவனமாகக் கையாளுதல். (22:1,2)

👉மிஞ்சினதும், பழுதடைந்ததும் அல்ல, எல்லாவற்றிலும் சிறந்தவற்றை கர்த்தருக்கு கொடுத்தல். (22:17-21)

👉 தேவனுடைய வார்த்தையை மீறாமல், இரட்சிப்பின் விடுதலையில் வாழ்தல். (22:31-33)

Tuesday, April 14, 2020

தேவனுடைய நாமம் பரிசுத்தக்குலைச்சலாகிறது ...



[லேவியராகமம் 18-20ல் இருந்து தியானம்]

👉 தவறான பாலியல் உறவுகள் மற்றும் மோசமான பழக்கங்கள்களினால்... (18:6-23; 20:11-23)

👉 உடல் அல்லது மனநலம் ரீதியாக ஊனமுற்றோற்களுக்கு தீங்கு விளைவிப்பதினால் (19:14) மற்றும் அநியாயமான தீர்ப்பை வழங்குவதினால்...(19:15)

👉 தேவனுடைய வார்த்தையையும் கட்டளைகளையும் கவனியாமலும் கீழ்ப்படியாமலும் போவதினால்... (18:4,5)

👉 தேவனுக்கு பயந்து அவருடைய ஆளுகையின் கீழ் வாழாமல் இருப்பதாலும், தன்னைத்தானே தீட்டுப்படுத்துவதினால்... (19:14; 18:30)

👉 குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களை வெறுத்து சபிப்பதனால்... (19:17,18; 20:9)

👉 ஏழைகள், அந்நியர்களை கவனியாமல், பலவீனமானவர்களை ஒடுக்குவதினால்... (19:10,33)

👉 தவறான மற்றும் நேர்மையற்ற வழிகளில் நடத்தல் மற்றும் பொய்பேசி மோசடிசெய்தலினால்... (19:11,35)

Monday, April 13, 2020

பரிசுத்த வாழ்வு



[லேவியராகம் 17ல் இருந்து தியானம்]

👉 புத்திசொல்லுதல் மற்றும் தேவனுடைய வார்த்தையின்படி நடத்தல். (1,2,7)

👉 எதையும் மறைக்காமல், எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் கொண்டுவருதல். (அறிக்கையிடுதல்) (5)

👉 தனது செயலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு, மனச்சாட்சியை சுத்திகரித்தல். (15,16)

👉 உலகத்தின் வழிகளில் நடவாமல் இருக்க, தேவனுடைய வார்த்தையின் வழிகளிலிருந்து விலகாதிருத்தல். (7)

Sunday, April 12, 2020

உள்ளான சுத்திகரிப்புக்கான படிகள்...



[லேவியராகம் 16ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய இரக்கத்திற்காய் நடுக்கத்துடன் அவரிடம் சேர்வது. (2)

👉 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலம் பாவநிவர்த்தியடைவது. (11,15)

👉 ஒருவருடைய தனிப்பட்ட, குடும்ப, மற்றும் ஜனங்களின்
சுத்திகரிப்புக்காக தேவசமூகத்தில் ஜெபத்தில் இருப்து. (6,16)

👉 அனைத்துப் பாவங்களையும் தேவனிடம் அறிக்கையிடுவது. (21)

👉 அசுத்தமான மற்றும் அவபக்தியாமான ஒவ்வொரு கூறுகளையும் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துவது. (26-28)

👉 ஆராய்ந்துபார்க்கவும், முமுவதும் சுத்திகரிக்கப்படவும் முறையாக உபவாசத்தோடு தேவசமூகத்தில் இருப்பது. (29-31)

Saturday, April 11, 2020

பரிசுத்தம் ...



[லேவியராகமம் 11-15ம் அதிகாரத்திலிருந்து தியானம்]

👉 தேவனுடைய குணத்தைக் பிரதிபலிப்பது, ஏனென்றால் அவர் பரிசுத்தர். (11:44)

👉 முற்றிலும் தேவனுடைய ஆளுகையின் கீழ் வாழ்வது. (11:44)

👉 பரிசுத்தமற்ற எதினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தாதிருப்பது. (11:44)

👉 பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவித்ததை நினைவுகூர்ந்து, விடுதலையாய் வாழ்வது. (11:45)

👉 பாவத்தில் நீடிக்காதபடிக்கு ஆராய்ந்துப் பார்க்க, தன்னைத்தான் தெய்வீக வழிகாட்டிகளுக்கு கணக்கொப்புவிக்கிறவர்களாக்கிக்கொள்வது. (13:5,6,11,25)

👉 சுத்திகரிக்கப்பட, தேவனுக்கு முன்பாக தனிமையில் தன்னைத்தானே ஆராய்வது. (13:46; 14:11)

👉 ஒருவரின் புலன்களையும் செயல்களையும் கர்த்தருடைய இரத்தம் மற்றும் வார்த்தையால் பரிசுத்தப்படுத்துவது. (14:17,18)

👉 மனந்திரும்பி, பரிசுத்தக்குலச்சலாக்கும் ஒவ்வொரு காரணியையும் (வாய்ப்பு அல்லது நட்பு) அகற்றிவிடுவது. (14:40)

👉 தேவனுடைய ஐக்கியத்திலிருத்து பிரிக்கிற ஒவ்வொரு அசுத்தமான காரியத்திலிருந்தும் விலகியிருப்பது. (15:31)

Friday, April 10, 2020

தேவனுடைய பரிசுத்தம் வெளிப்படுத்தப்படுவதற்காக...



[லேவியராகமம் 10ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய சிட்சையையும் தேவபிள்ளைகளுடைய சிட்சையையும் வெறுக்காதீர்கள். [Hate not discipline] (3,6)

👉 தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, [Obey God's word] அதை பிறருக்கு போதியுங்கள். (8,9,11)

👉 தேவனுடைய மகிமைக்காக வாழுங்கள். [Live for God's glory] (3)

👉 தேவன் சிட்சிக்கும்போது அவரது வழிகளையும் நடத்துதல்களையும் குறித்து ஆராய்ந்துப்பாருங்கள். [Introspect] (6)

👉 நட்பு அல்லது ஐக்கியம் அல்லது குடும்பம் காரணமாக ஒரு நபருடன் இருக்கும் நெருக்கம் [Nearness] மக்களைத் திருத்துவதைத் தடுக்கக்கவிடாதீர்கள். (3,7,16)

👉 ஜனங்களுக்கு புத்திசொல்லுங்கள், [Exhort] எச்சரியுங்கள், ஒழுங்குபடுத்துங்கள். (6-10)

👉 தோல்வியுற்றவர்களை விலக்கிவிடாமல், [Shun not] திருத்துங்கள். திருத்துகிறவர்களைவிட்டு விலகிவிடாதீர்கள் (16-20)

👉 அழைப்பையும் அபிஷேகத்தையும் நினைப்பூட்டி, பரிசுத்தத்திற்கு நேராக ஜனங்களை தட்டி எழுப்பிவிடுங்கள். [Stir up] (7,10,11)