Saturday, April 11, 2020

பரிசுத்தம் ...



[லேவியராகமம் 11-15ம் அதிகாரத்திலிருந்து தியானம்]

👉 தேவனுடைய குணத்தைக் பிரதிபலிப்பது, ஏனென்றால் அவர் பரிசுத்தர். (11:44)

👉 முற்றிலும் தேவனுடைய ஆளுகையின் கீழ் வாழ்வது. (11:44)

👉 பரிசுத்தமற்ற எதினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தாதிருப்பது. (11:44)

👉 பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவித்ததை நினைவுகூர்ந்து, விடுதலையாய் வாழ்வது. (11:45)

👉 பாவத்தில் நீடிக்காதபடிக்கு ஆராய்ந்துப் பார்க்க, தன்னைத்தான் தெய்வீக வழிகாட்டிகளுக்கு கணக்கொப்புவிக்கிறவர்களாக்கிக்கொள்வது. (13:5,6,11,25)

👉 சுத்திகரிக்கப்பட, தேவனுக்கு முன்பாக தனிமையில் தன்னைத்தானே ஆராய்வது. (13:46; 14:11)

👉 ஒருவரின் புலன்களையும் செயல்களையும் கர்த்தருடைய இரத்தம் மற்றும் வார்த்தையால் பரிசுத்தப்படுத்துவது. (14:17,18)

👉 மனந்திரும்பி, பரிசுத்தக்குலச்சலாக்கும் ஒவ்வொரு காரணியையும் (வாய்ப்பு அல்லது நட்பு) அகற்றிவிடுவது. (14:40)

👉 தேவனுடைய ஐக்கியத்திலிருத்து பிரிக்கிற ஒவ்வொரு அசுத்தமான காரியத்திலிருந்தும் விலகியிருப்பது. (15:31)

No comments:

Post a Comment