Monday, April 20, 2020

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் அடையாளங்கள்!



[லேவியராகமம் 27ல் இருந்து தியானம்]

👉 இரட்சிப்பு & பரிசுத்தமாக்குதல் - நாம் மீட்கப்பட்டு, அர்ப்பணிப்புள்ளவர்களாயிருக்க பரிசுத்தமாக்கப்படுதல். (10,11)

👉 பரிசுத்தம் - கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட எல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருத்தல். (28)

👉 தேவனுக்குரியது - வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் தேவனுக்குரியவர்களாய் வாழுதல். (2-7)

👉 வித்தியாசங்கள் - வயதுக்கும் கிரு‌‌பைகளுக்கும் ஏற்ப வித்தியாசப்படும் அர்ப்பணிப்பை ஏற்றுக்கொள்ளுதல். (2-7)

👉 கீழ்ப்படிதல் - பிரதிஷ்டை மதிப்பீடு செய்யும்படிக்கு, தெய்வீக தலைமைக்கு கீழ்ப்படிதல். (8,14,23)

👉 பணிவு - திறமையை காட்டிலும் எப்பொழுதும் எதையும் செய்யும் ஆயத்ததோடு சேவை செய்தல். (8)

👉 வெளிப்படைத்தன்மை - எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையாக வாழுதல். (30-33)

👉 உக்கிராணத்துவம் - நம்மிடம் இருப்பது அனைத்தும் தேவனுக்கு சொந்தமானது என்று அறிந்து பயன்படுத்துதல் மற்றும் கணக்கொப்புவித்தல். (9,14,16,17)

No comments:

Post a Comment