[லேவியராகமம் 4-7 இருந்து தியானம்]
👉 தாங்கள் செய்யும் பாவங்களுக்காக ஒவ்வெருவரும் தனிப்பட்டவிதத்தில் கணக்கு கொடு்க்கவேண்டியவர்கள். [Accountable] (4:3,13,22,27; 7:29,30)
👉 பழிப்போடுவது [Blame-shifting], மறைப்பது மற்றும் பொய் சத்தியம் செய்வது பாவம்; இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பே தீர்வு. (5:16; 6:1-5)
👉 அறிக்கையிடுதல் [Confession] மற்றும் மனந்திரும்புதல் குற்றத்தையும் தண்டனையையும் நீக்குகிறது. (5:5,6)
👉 ஏமாற்றுவதும் [Deceiving] மோசடி செய்வதும் பாவம். கர்த்தரிடத்தில் மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இழப்பீடு செலுத்தியாகவேண்டும். (6:1-6)
👉 செய்திருக்கிற ஒவ்வொரு பாவமும் [Every sin] தேவனுக்கு எதிராக செய்யப்பட்டவையே. (6:1)
👉 நாம் பார்த்த அல்லது அறிந்துகொண்ட ஒருவரின் பாவமான விஷயத்தைப் பற்றி தெரிவியாமல் இருப்பது, பேசத்தவறியது [Failing to speak up] பாவம் (5:1)
👉 தேவனுடைய பலிக்காகவும் அவருடைய மன்னிப்புக்காகவும் நன்றி செலுத்துங்கள். [Give thanks] (7:13)
👉 கர்த்தர் பரிசுத்தர் [Holy], அவருடைய தியாகபலி நம்மைச் சுத்திகரிக்கிறது, அவருடைய மன்னிப்பை ருசித்த பிறகும் நாம் பாவத்தில் தொடர்ந்தால் நம்மீது குற்றத்தை ஏற்படுத்துகிறோம். (7:20,21)
👉 அறிந்தோ [Intentional] அறியாமலோ [unintentional] செய்யும் பாவம், பாவமே. (4:2; 6:1)
No comments:
Post a Comment